கோவிட் 19க்கு எதிரான வக்சின்கள் ஜனவரி மாதத்தில் கனடாவுக்கு கிடைக்கும்

கோவிட் 19க்கு எதிரான வக்சின் எதிர்வரும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து கனடாவுக்கு கிடைக்கும் என ஒன்டாரியோ மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott இன்று தெரிவித்தார்..இன்று குயின்ஸ் பார்க்கில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சுகாதார அமைச்சர் கோவிட் 19 தொற்றுக்கு எதிரான வக்சின்களில் 4 மில்லியன் Pfizer’s vaccines 2 மில்லியன் Modernas’s vaccines வருகின்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் இடைப்பட்ட காலங்களில் கனடா பெற்றுக்கொள்ள இருக்கின்றது என்று தெரிவித்தார்.இவற்றில் இருந்து ஒன்டாரியோ மாகாணம் 1 .6 மில்லியன் Pfizer’s வக்சின்களையும் 800 ஆயிரம் Modernas’s வக்சின்களையும் பெற்றுக்கொள்ளும் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.முதலில் இந்த வக்சின்கள் வைத்தியசாலைகளில் வேலை செய்வோர்கள் முதியவர்கள் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த வக்சின்களில் உள்ள முக்கிய விடயம் என்னவெனில் Pfizer’s vaccines மைனஸ் 75 டிகிரி உள்ள பகுதிகளில் வைக்கப்பட வேண்டும் என்றும் Modernas’s vaccines மைனஸ் 20 டிகிரி உள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.இந்த வக்சின்களில் ஆய்வு மேற்கொண்ட போது 95 வீதம் வெற்றியளிக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.