கோவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்டங்களை தொடர்ந்தும் வழங்க முடிவு!

பிரதமர் ஜஸ்டின் ரூடோ கோவிட் வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் கனேடியர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற நலத்திட்டங்களை தொடர்ந்தும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.கோவிட் வைரஸ் தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான நலத்திட்டங்களை அரசாங்கம் மக்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.