கோழிக்குஞ்சுக்கும் தையல் மிசினுக்கும் வாக்குகளை விற்பதே பின்னடைவிற்கு காரணம்.

கோழிக்குஞ்சுக்கும் தையல் மிசினுக்கும் வாக்கை விற்பதே பின்னடைவிற்கு காரணம்
   வேட்பாளர் திலீபன்!!  – வவுனியா  

தேர்தல் காலத்தில் கோழிக்குஞ்சுக்கும் தையல் மிசினுக்கும் எமது வாக்கை விற்பதே தமிழர்களின் பின்னடைவிற்கு காரணம் என்று ஈழமக்கள் ஐனநாயக்கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளரும் வேட்பாளருமான கு. திலீபன் தெரிவித்தார்.

வவுனியாவில்  இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…  

அண்மையில் முல்லைத்தீவில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அந்தச்சின்னம் விறகு கட்டையோ மெழுகுதிரியோ என்று நினைக்கிறேன். எனக்கு சரியாக நினைவில்லை.

அந்த விறகு கட்டையில் கேட்கின்றவர். டக்ளஸ் மக்களுக்கு என்ன செய்தார் என்று கேட்கின்றார். ஆறு மாதங்கள் மாத்திரமே அமைச்சராகவிருந்து பூந்தோட்டம் சிதம்பரபுரம் அகதி முகாம்களில் இருந்த மக்களை சுந்தரபுரம் தரணிக்குளம் பகுதிகளில் குடியேற்றியுள்ளார். அதனை மறந்துவிட்டீர்களா?

சஜித்பிரேமதாச ஐயாபோல ஐந்தரை இலட்சம் ரூபாய் வீட்டுத்திட்டம் 50 ஆயிரம் பிடிகாசு என்று கூறி மக்களை கடனாளி ஆக்கவில்லை நாம். அரை ஏக்கர் காணி வீட்டு திட்டம், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி இவை எல்லாவற்றையும் செய்தே அந்த குடியேற்றத்தை செய்தோம்.

வடக்கின் வசந்தத்தில் இலவச மின்சாரத்தை இந்த மக்களுக்கு வழங்கியது யார்? வவுனியா ஆச்சிபுரம் பகுதி மக்களுக்கு மின்சாரதேவையை பூர்த்திசெய்யும் பணியை எமது டக்ளஸ் தேவானந்தா செய்து கொடுக்க அதை தான் செய்வதுபோல பாசாங்கு செய்தார் அந்த கொள்ளிக்கட்டையில் போட்டியிடுபவர். ஏன் வீணாக தட்டி வெட்டி விளம்பரம் செய்கிறீர்கள்.  

இந்த பகுதியில் பலமுறை அமைச்சராக இருந்த றிசாட் பதியூதீன் ஒரு 10 தமிழ் குடியேற்றமாவது செய்தாரா இல்லை. மாறாக காப்பெற் வீதிகளை போட்டு சாளம்பைக்குளத்தையும் ஆண்டியா புளியங்குளத்தையும் உருவாக்கினார்.
எமது கிராமங்களில் வீதிகள் எப்படியிருக்கின்றது. சாளம்பைக்குளத்தில் விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் பாதைகூட காப்பெற்றாகத்தான் போடப்பட்டுள்ளது. இதற்கு யார் காரணம் கோழிக்குஞ்சுக்கும்இதையல் மிசினுக்கும் எமது வாக்கை விற்பதே காரணம்.

நல்ல வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம், படித்த இளைஞர்களிற்கு வேலை வாய்ப்பு, நல்ல வீதிகள் இவற்றை பெற்றுக்கொடுத்த பின்னர் நீங்கள் துப்பாக்கியை தூக்கினாலும் சரி பெனரை தூக்கினாலும் பரவாயில்லை.

எமது மக்கள் எழுந்து நிற்கவே சக்தியில்லாத சூழலில் உங்களை மீண்டும் பாழுங்கிணற்றுக்குள் தள்ளுவது சரியானாதா, எனவே நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.