கோடி கணக்கில் சம்பளம், இருந்தாலும் பட வாய்ப்பை உதறி தள்ளிய நடிகை சாய் பல்லவி!

நிவின் பாலி மூன்று பருவங்களில் நடித்து வெளிவந்தது மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் சூப்பர் ஹிட்டான படம் பிரேமம்.

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.

ஆனால் தமிழில் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் என்.ஜி.கே என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சாய் பல்லவி.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவியை தேடி மாபெரும் ஒரு வாய்ப்பு வந்துள்ளதாம்.

அது என்னவென்றால் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கோடி கணக்கில் சம்பளம் பேசி நடிகை சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்ய இருந்தாராம்.

ஆனால் இப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக ஹாட் காட்சிகள் இருப்பதினால், இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று அந்த வாய்ப்பை உதறி தள்ளி விட்டாராம் நடிகை சாய் பல்லவி என தகவல்கள் கசிந்துள்ளன.