கொழும்பு மாநகர சபையின் பணி மேற்பார்வையாளர் விளக்கமறியலில்

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட கொலன்னாவை நகர சபையில் பணியாற்றிய கொழும்பு மாநகர சபையின் பணி மேற்பார்வையாளர் ஜகத் ஜயலால் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் ஒரு கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயினுடன் அண்மையில் பாதுக்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி பாதுக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.