கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியாவில் மரண தண்டனை

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் கடந்த 2005 ஆண்டு காலப்பகுதியில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையேயான பணக்கொடுக்கல் வாங்கல் தகராறுடன் கூடிய  முறுகல் நிலையைத் தொடர்ந்து மெனிக்பாம் கிராமத்தில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மாமனாரை நல்ளிரவு வேளையில்  கோடரியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்த மருமகனுக்கே வவுனியா மேல்நீதி மன்றினால்  நேற்று (04.11) மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
2018.08.20ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னரே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.எனினும் குற்றவாளி தலைமறைவாகியுள்ளதால் திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.