கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை முறை

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை முறையான பிளாஸ்மா சிகிச்சைக்கு அங்கீகாரம் அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னர் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் அரசு நிபுணர்களை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த பிளாஸ்மா சிகிச்சை (convalescent plasma) என்ற சிகிச்சை முறைக்கு அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் அளித்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சிகிச்சையால் உயிரிழப்பு 35 சதவீதம் குறையும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மாதம் இதனை அமுலுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதற்கான உரிமம் பெற்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த சிகிச்சை ஏற்கனவே அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அதன் செயற்திறனின் அளவு இன்னும் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று சிலர் எச்சரித்துள்ளனர்.

எவ்வாறிருப்பினும் பிளாஸ்மாவில் சக்திவாய்ந்த ஆன்டிபாடிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை நோயை விரைவாக எதிர்த்துப் போராட உதவும்.மேலும் மக்களால் கடுமையாக பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.