கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 411 இலங்கையர்கள் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தை, இன்று (சனிக்கிழமை) காலை வந்தடைந்துள்ளனர்.

கட்டார்– தோஹாவிலிருந்து 332 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 21 பேரும்  இந்தியாவிலிருந்து 58 பேரும் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக  விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.