கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 381 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 381 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி  ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 289 பேர் இன்று (18) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதேநேரம் துபாயிலிருந்து 55 பேரும் மாலைத்தீவிலிருந்து 29 பேரும் இந்தியாவிலிருந்து 7 பேரும் கட்டாரிலிருந்து ஒருவரும் நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.