கொரோனா வைரஸ் தொற்றாளர்களாகநேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த தகவல் வெளியானது!

நேற்று (09) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1083 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4523 ஆக அதிகரித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3296 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 1209 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 350 பேர் மருத்துவர்களால் ண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.