கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் பாடசாலைகளுக்கு வழங்கி வைப்பு(படங்கள் இணைப்பு)

வவுனியாவிலுள்ள பாடசாலைகளுக்கு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் நிதி உதவியில் வவுனியா பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வேண்டுகோளினடிப்படையில் கொவிட் 19 கொரோனா வைரஸ் மாணவர்களுக்கான விழிப்புணர்வு பதாதைகள் 100, பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று காலை தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது .


வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையாக இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் வவுனியா கிளையின் அனுசரணையில் வவுனியா பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரனின் வேண்டுகோளினடிப்படையில் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக 100 விழிப்புணர்வு பதாதைகள் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் தாய் சேய் நல வைத்திய அதிகாரி தா.ஜெயரதன் , வவுனியா சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி திருமதி பாஸ்கரன் , சுகாதார கல்வி அதிகாரி எம்.கேதீஸ்வரன் , மாவட்ட பல் வைத்திய அதிகாரி ஜெஸ்லியன் , சிரேஷ்ட சுகாதார பரிசோதகர் க . தியாகலிங்கம் , வவுனியா கல்வி வலயப்பணிப்பாளர் மு. இராதாகிருஷ்ணன் ,  இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் வவுனியா கிளையின் தொண்டர்கள், ஊழியர்கள்,பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர் . 
இதேவேளை இன்று வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திலும் பதாதைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது .இதனை தொடர்ந்து ஏனைய பாடசாலைகளிற்கும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.