கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்துள்ளது

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரக் குறிப்பின் படி, கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 53,08,015 கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 95,880 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42,08,432 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 10,13,964 ஆக உள்ளது. இதுவரை நோய் தொற்று 85,619 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,247 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 78.86% உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.62% ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் இதுவரை மொத்தம் 6,24,54,254 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் நாடு முழுவதும் 8,81,911 கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.