“கொரோனா பாதிப்பின் 2வது அலை வராமல் இருக்க, பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்” – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்படுவோர் விகிதம் 3 புள்ளி 5 சதவீதமாக உள்ளதாக தெரிவித்தார். அண்டை மாநிலங்களைவிட கொரோனா குறைந்துகொண்டு வருவதாகவும், தமிழகத்தில் ஒரு கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க, பண்டிகை காலங்கள் காரணமாகிவிடக் கூடாது என தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வராமல் இருப்பது பொதுமக்கள் கையில் உள்ளது என்றார்.