கொரோனா பாதித்த நாடுகளுக்கு சிறப்பு திட்டங்கள்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் அதிக அபாயம்:  சிங்கப்பூர் பிரதமர் ...

கொரோனா நோய்த்தொற்றால் வீழ்ச்சியைச் சந்தித்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் 43,706 கோடி ரூபா மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக சிங்கப்பூர் பொருளாதாரம் சரிவைக் கண்டது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் அந்நாட்டின் பொருளாதாரம் 6.7 சதவீத அளவுக்கு சரிவடைந்தது.

இத்தகைய சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 43,706 கோடி ரூபா மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் துணை பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் ஸ்வீ கீட் திங்கட்கிழமை அறிவித்தார்.

அதில் பெரும்பாலான பகுதி நாட்டில் உள்ள பணியாளர்களைக் காக்கவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பெரும் சரிவைச் சந்தித்த துறைகளை மீட்டெடுக்கவும் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். நோய்த்தொற்றால் சரிவைச் சந்தித்த நிறுவனங்களுக்கும் போதிய நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

சிங்கப்பூரில் 55,838 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 27 பேர் உயிரிழந்தனர்.