கொரோனா, பருவ கால வைரசாக மாறும்: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரசின் தன்மையை பற்றி லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 
அதில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து உலகத்தில் தங்கி இருக்கும் என்றும், ஆண்டு முழுவதும் பருவ கால நோய்போல வலம் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சிறந்த தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.