கொரோனா நோய்த்தொற்று நீரிழிவு போன்ற தொற்றா நோயாளர்களுக்கு ஏற்பட்டால் 10 வருடங்கள் ஆயுட்காலம் குறையும்!

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர்களின் ஆயுட்காலத்தில் 10 வருடங்கள் குறைய கூடும் என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானால் அவர்களின் ஆயுட்காலம் 10 வருடங்கள் குறையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

அதற்கமைய 60 வயது கடந்தவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் வீடுகளில் உயிரிழப்பதற்குக் கவனக்குறைவே முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.