கொரோனா தொற்று காரணமாக பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய முடியும் -அமேசன்

கொரோனா தொற்று காரணமாக பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய முடியும் என்றும் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான காலக்கெடுவை எதிர்வரும் ஜூன் வரை நீடிப்பதாகவும் அமேசன் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பினை அமேசன் நிறுவனத்தின் ஊடக பேச்சாளர் மின்னஞ்சல் வழியாக அறிவித்தார் என சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.முன்னதாக அடுத்த ஆண்டு ஜனவரி வரை வீட்டில் இருந்து பணிபுரியலாம் என அமேசன் நிறுவனம் அறிவித்திருந்தது.

உலகின் மிகப்பெரிய ஒன்லைன் விற்பனையாளரான அமேசன் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் 19,000 க்கும் அதிகமானோருக்கு இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியிருந்தது.இந்நிலையில் அலுவலகத்திற்கு வரவேண்டியவர்கள் என தேர்ந்தெடுப்பவர்களை சமூக இடைவெளி, வெப்பநிலை சோதனைகள் மற்றும் முக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பு திரவத்தை வழங்குவதன் மூலம் பாதுகாப்பாக வைத்திருக்க குறிப்பிடத்தக்க நிதி மற்றும் வளங்களை முதலீடு செய்துள்ளதாக அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.