கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை முன்னேற்றம் – மருத்துவக் குழு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை மேம்பட்டு வருவதாக அவரது மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவரை நாளை (06) மருத்துவமனையில் இருந்து வெளியேற்றலாம் என மருத்துவக் குழு இன்று அறிவித்துள்ளது.இதேவேளை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உடல்நிலை மிகவும் சிறந்ததாக உள்ளதாக மருத்துவமனையில் இருந்து டுவிற்றர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ’பிரையன், டொனால்ட் ட்ரம்ப் மிகவும் நன்றாக இருக்கிறார் என இன்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் நேற்று முதல் வோல்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.