கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சுகாதாரத்துறையினரின் தொடர் உழைப்பால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.கொரோனா தடுப்பூசிகள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்திய அமைச்சர் விஜபாஸ்கர், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.தமிழகத்தை பொறுத்த வரை 3 லட்சத்து 59 ஆயிரம் முன்களப் பனியாளர்கள் நேற்று வரை தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர். ஒரு நாளுக்கு பத்தாயிரம் என்கிற எண்ணிக்கையில் ஊசிகள் போடப்பட்டு வருகிறது எனக் கூறிய அமைச்சர், தமிழகத்தில் இரண்டாவது அலை வருவதற்கு சாத்திய கூறுகள் மிகவும் குறைவு எனக் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்திற்கு இதுவரை கோவாக்சின் – 1,89,000, கோவிஷீல்ட் – 14,85,000 ஊசிகள் வந்துள்ளது. பொதுமக்களுக்கு ஊசி போடுவது குறித்து ஒப்புதலுக்காக காத்து இருக்கிறோம் வந்தவுடன் ஆரமிப்போம் என்று தெரிவித்தார்.

.