கொரோனா சிறப்பு மருத்துவமனையில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் செவிலியர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பதி அரசு மருத்துவமனை அருகே கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட நிலையில் மேலும் படுக்கைகளை அதிகரிக்க மருத்துவமனை வளாகத்தில் விரிவாக்கப் பணி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை கொரோனா வைரஸ் தொற்று உடன் வந்த ஒரு நோயாளியை அழைத்துச் செல்வதற்காக அங்கு பணியாற்றும் செவிலியர் மருத்துவமனை வாயிலுக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மேலிருந்து சரிந்து விழுந்த சுவர் செவிலியர் மற்றும் நோயாளிகள் மீது விழுந்தது இதில் சம்பவ இடத்திலேயே செவிலியர் பலியானார். 

நோயாளிகள் இரண்டு பேருக்கு பலத்த காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இது குறித்து அலிபிரி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.