கொரோனா அச்சுறுத்தல்: வடகொரியா எல்லையில் நுழைய முயல்பவர்களை சுட்டுக்கொல்ல கிம் ஜாங் உன் உத்தரவு!

உலகின் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத ஒரே நாடாக வடகொரியா அரியப்படுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் சீனாவுடனான எல்லைகளை வட கொரியா மூடியுள்ளது. மேலும் சீனாவுடானான வர்த்தைகத்தையும் தற்காலிகமாக முடக்கியது. இதனால் சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் விகிதம் 85% குறைந்துள்ளது. மேலும் புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாகவும் அந்நாடு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனை தொடர்ந்து மேலும் எந்த புதிய பாதிப்புகளை சந்திக்காத வகையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்நாடு செய்து வருகிறது. 

இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா பரவாமல் தடுக்க எல்லைதாண்டி நுழையும் மக்களை சுட்டுக்கொல்ல அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவப்படையின் தளபதி, வட கொரியா சீன எல்லையில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கியுள்ளதாகவும் அங்கு கண்காணிப்பில் உள்ள வட கொரிய சிறப்புப் படைகளுக்கு சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் சீனாவில் இருந்து வடகொரியா எல்லையில் ஊடுருவ முயற்சிப்பவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.