கொரோனா அச்சத்தால் மேலும் 322 பேர் தாயகம் திரும்பினர்

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டாருக்கு தொழிலுக்காக சென்றிருந்த 322 இலங்கையர்கள் இன்று (30) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 280 பயணிகளும் மற்றும் கட்டாரில் இருந்து 42 பயணிகளும் இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டப் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.