கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தொடர்பில் முன்னேற்றம்..

ஜெனிவா: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் “நல்ல முன்னேற்றம்” அடைந்துள்ளனர். ஒரு சில சோதனைகள் மட்டுமே தாமதமான நிலையில் உள்ளன. எனினும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் பயன்பாட்டை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் தெரிவித்தார். இங்கிலாந்தின் க்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இது மனிதர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளது. இதேபோல் ஜெர்மனி, சீனா மற்றும் ரஷ்யாவும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

இப்படி உலகின் பல நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் “நல்ல முன்னேற்றம்” அடைந்துள்ளன. இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் பயன்பாட்டை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் கூறியுள்ளார்.