கொரோனாவிற்காக ஆறாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

கொரோனாவிற்காக ஆறாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.

கொரோனாவைக் கட்டுப்படுத்த 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீட்டில் தமிழக அரசு பல திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் கொரோனா தடுப்புப் பணிக்காக மத்திய அரசிடம் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கேட்டுள்ளதாகவும் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அமைந்துள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் ஆய்வினை மேற்கொண்டதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 2 ஆயிரம் தொழிநுட்பவியலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.