கொரோனாத் தொற்றின் உக்கிரத்தால் வடக்கில் பல பாடசாலைகள்சிகிச்சை மையங்களாக மாற்றம்

வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்
களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய வவுனியா மாவட்டத்தில் மூன்று முறிப்பிலுள்ள தமிழ் மற்றும்
சிங்களப் பாடசாலைகள், ஓமந்தைப் பாடசாலை ஆகியவற்றுடன் யாழ். மாவட்டத்
தில் நாரந்தனை றோ.க. பாடசாலை என்பன முதல் கட்டமாக கொரோனா சிகிச்சை
நிலையங்களாக மாற்றப்படுகின்றன.

இதேவேளை, வடக்கில் மேலும் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை
நிலையங்களாக மாற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.