கொரொனா நோய்த்தொற்றால் பணியாளர்கள் சம்பளங்கள் குறைப்பு

கொரோனா நோய்த்தொற்று நிலைமையின் காரணமாக தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய சிவில் சேவை பணியாளர்களின் சம்பளங்களை 4 வீதங்களினால் குறைப்பதற்க்கு அல்பேர்ட்டா மாகாண அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.அத்துடன் அல்பேர்ட்டா மாநில தொழிலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவர் கெவின் பெரி இந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் நேரத்தில் சம்பளம் குறைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனக்கூறியுள்ளார்.அத்துடன் சம்பளங்களை முன்னதாக மூன்று ஆண்டுகளுக்கு தலா ஒரு வீதம் என்ற அடிப்படையில் குறைப்பதற்க்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.அல்பேர்ட்டா மாகாணத்தில் இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 24.2 பில்லியன் டொலர் துண்டு விழும் தொகை இடப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.