’கொயட் பண்ணுடா’: மாஸ்டர் பட பாடலை வெளியிட்ட அனிருத்

’கொயட் பண்ணுடா’: மாஸ்டர் பட பாடலை வெளியிட்ட அனிருத்

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 22 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தீபாவளி அல்லது பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளை அடுத்து ’கொயட் பண்ணுடா’என்ற பாடல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
அதன்படி சற்று முன்னர் இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ வெளியான ஒரு சில நிமிடங்களில் ’கொயட் பண்ணுடா’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.