கொடை

What Are You Doing To Retain Donors? | A Donor Loyalty Assessment

மனிதநேயத்தின் பிறப்பிடம்
மனிதனின் அடையாளம்
அன்பின் அழகு
கொடையின் பேரழகு!

பசித்தோர் அனைவருக்கும்
அன்னதானம் செய்
அள்ளிக்கொடுக்கும் சிரம் தான் அழகு!

வாழ்வை வெறுப்போருக்கு
அன்பை தானம் செய்
புன்னகை சிதறும் இதழ் தான் அழகு!

ஆதரவற்ற எவராயினும்
கல்விதானம் செய்
அறிவூட்டும் ஜானம் தான் மென்மையின் அழகு!

தானத்தில் சிறந்த தானம்
என்றெதும் இல்லை
உதவும் எண்ணமே தானத்தினும் அழகு!

இந்த கொடையில் தான் மனநிறைவு
இந்த கொடையில் தான் உயிருயர்வு
உணர்ந்து வாழ்!
உயர்ந்து வாழ்!