கொடைக்கானலில் கடும் குளிர்: ஒருவர் உயிரிழப்பு!

சின்னமனூர் பகுதியில் உள்ள கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் பணக்கொடி. இவர் மதுரை குடும்பத்துடன்  கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில், தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த அவருக்கு கடும் குளிர் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பணக்கொடி, வரும் வழியில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.