கைதட்டி பாராட்டிய கமல் – நெகிழ்ச்சியில் கலங்கிய அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை தீர்த்து வைக்க வந்துவிட்டார். இன்றைய எபிசோடில் இந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்களை குறித்து போட்டியாளர்களை கண்டிக்கவும் எவிக்ஷனில் வெளியேற்றவும் கோபமாக பேசி கொந்தளிக்கிறார்.

அந்தவகையில் தற்ப்போது அனிதாவின் சுமங்கலி விவகாரம் குறித்து கமல் வீட்டில் உள்ள அனைவரிடமும் கருத்து கேட்கிறார். அதில் அர்ச்சனா வழக்கம் போலவே எதிர்மறையாக கருத்து தெரிவித்து பல்ப் வாங்கிக்கொண்டார்.

பின்னர் அனிதாவிடம் கமல் கேட்டதற்கு, “இப்பவும் நான் அதை மாற்றிக்கொள்ளமாட்டேன். நான் சரியாக பேசியதாக தான் நினைக்கிறன். கணவன் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒரு பெண் எப்போதும் பெண்ணாகவே மதிக்கப்படவேண்டும் என தனது கருத்தை அழுத்தமாக பதிவிட்டு கமலின் கை தட்டலுக்கும் பாராட்டுக்கும் ஆளாகினார்.