கைக்குண்டுடன் யாழில் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்றுள்ளார்.

இதனை அவதானித்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவரது உடமையில் இருந்து கைக்குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.