கே.ஜி.எஃப் -2 படத்தின் டீசர் எப்போது ரிலீஸ்!எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

KGF Chapter 2 first look: Yash is back as Rocky | Entertainment News,The  Indian Express

கன்னட ஆக்‌ஷன் ஸ்டார் யஷ் நடிப்பில் 2018ல் வெளியான படம் கேஜிஎஃப். தங்க சுரங்கத்தை மையமாக கொண்ட அனல் பறக்கும் ஆக்‌ஷன் கதையாக இதை எழுதி இயக்கி இருந்தார் பிரசாத் நீல். கன்னடம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியான இந்த படமும், இதன் பாடல்களும் இந்தியா முழுவதும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. இந்தியாவில் மட்டுமல்லாது சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை படைத்தது கேஜிஎஃப் அத்தியாயம் ஒன்று.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் அக்டோபர் 23 ஆம் திகதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் தள்ளிப்போனதால் ரிலீஸ் திகதி இன்னும் முடிவாகவில்லை. இதனால் எப்போது படம் வெளியாகும் என ரசிகர்கள் பலர் தீவிரமாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். பிரகாஷ் ராஜ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என சரியான தகவல் வெளியாகாத நிலையில் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் கேஜிஎஃப் -2 படத்தின் டீசர் வரும் ஜனவரி 8 ஆம் திகதி யஷ்ஷின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் ஐதராபாத்தில் உள்ளா ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.