கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான விபத்து தொடர்பான விசாரணைகளை புலனாய்வு அமைப்பகம்  ஆரம்பித்துள்ளது.

புலனாய்வு அமைப்பகத்தின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கிய போது கனமழை பெய்த காரணத்தால்  ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீர்  விமானம் கட்டுப்பாட்டை  இழந்து விபத்துக்குள்ளாக காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள கறுப்பு பெட்டி மூலம் சரியான காரணங்கள் விரைவில் தெரியவரும் என எதிர்பார்கப்படுவதாகவும் புலனாய்வு அமைப்பகம் தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் டுபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம் விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.