கேரளா கஞ்சா மீட்பு

நேற்று (06) மாலை கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் போதைப் பொருள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 40 இற்கு மேற்பட்ட கேரளா கஞ்சா பெக்கட்டும் மற்றும் பெக்கட் செய்ய வைத்து இருந்த கேரளா கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.

குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக இரகசியமாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளா கஞ்சா பெக்கட் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.