கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள் !!

The Economist explains - How did carrots become orange? | The Economist  explains | The Economist

காரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு இந்த பீட்டா கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைப்பதால் கண்களில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, வயதான  காலத்திலும் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகிறது.

கேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும்  பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. 

கேரட்டை அதிகளவில் சாப்பிடுபவர்களுக்கு இதய இரத்த செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் வலுவடைகிறது. மேலும் உடலில் பித்த சுரப்பை அதிகரிக்கச் செய்து, கொழுப்புகளை கரைத்து, இதய நரம்புகளில் கொழுப்பு படியாமல் தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. 

பச்சையான கேரட்டை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு பற்களில் நுண்கிருமிகள் படிவதைத் தடுத்து, பற்சொத்தை, பற்களின் எனாமல் வலுவிழப்பது போன்ற  குறைபாடுகளை நீக்கி ஈறுகளை பலப்படுத்துகிறது. 

கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உணவில் நார்ச்சத்து தேவை பூர்த்தியாகி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. 

காரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது