கேகாலை – புளத்கொஹூபிட்டி பகுதியில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கேகாலை – புளத்கொஹூபிட்டி பகுதியில் 9 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புளத்கொஹூபிட்டி மற்றும் லேவல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மேலும், குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை  அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும் வரை குறித்த தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இன்று காலை வரையான காலப்பகுதியில் மொத்தம் 10,424 கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.சுகாதார அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 6123 நோயாளிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 4282 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

குறித்த கொரோனா வைரஸ் தொற்றினால், இதுவரை 20பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.