கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 93 இலங்கையர்கள்  நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி சீனாவின் குவாங்சோவிலிருந்து நால்வரும் அபுதாபியிலிருந்து ஐவரும் கட்டார் – தோஹாவிலிருந்து 39 பேரும் மஸ்கட் – ஓமானிலிருந்து 30 பேரும் பாகிஸ்தான் – கராச்சியிலிருந்து 13 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

நாடு திரும்பிய அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பல்வேறு நாடுகளிலும் தொழில் வாய்ப்புக்காக 180 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.