கெத்து காட்டும் சமந்தா – வேற லெவல் ஒர்க் அவுட் வீடியோ!

Samantha Akkineni hard gym workout|Sam Latest Workouts|2 states - YouTube

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் திகதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

நடிகை சமந்தாவும் வீட்டில் இருந்தபடியே காய்கறி , கீரை , முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை தன் வீட்டு மொட்டைமாடியில் கார்டனிங் செய்து அறுவடை செய்து வந்தார். மேலும், புதியதாக பேஷன் டிசைனர் கம்பெனி தொடங்கியுள்ளார். அத்துடன் போட்டோ ஷூட், ஒர்க் அவுட் என லாக்டவுனிலும் முழு நேரம் பிசியாக இருக்கிறார். அந்தவகையில் தற்போது weightlifting தூக்கி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸ்ல் வெளியிட்டு வியப்படைய வைத்துள்ளார்.