கூட்டமைப்பிலிருந்து TELO விலகலா?

பொய்யான செய்தி – செல்வம்


தமிழீழ விடுதலை இயக்கம் தமிழர்களின் இருப்பிற்கும் விடிவுக்காகவும் செயற்படும் அதேநேரம் தற்போது போன்றே கூட்டமைப்பில் மேலும் பலமாக பயணிக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்து செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

 
தம்மை பகடையாக வைத்து தமிழரசுக் கட்சியின் தலைவரை பிரிக்கலாமென்றும் கூட்டமைப்பின் 05பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பக்கம் சாய்வார்கள் என்றும் தவறான எண்ணத்தில் சிலர் இவ்வாறு செய்திகளை பரப்பி வருவதாக மேலும் தெரிவித்தார். 


இதேவேளை கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியல் தமது சம்மதமின்றி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக கூட்டமைப்பை பிளவுபடுத்த காரணமாக இருக்கப்போவதில்லை என தெரிவித்தார்.