குழந்தை ஒன்று கட்டடம் விழுந்து பலி

கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் தாழிறங்கிய கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

2 மாதங்கள் வயதான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த பகுதி தாழிறங்கியுள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இதன்போது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.