குழந்தைகளுக்கு மெகந்தி வைத்த சாய் பல்லவி….புகழந்த சமந்தா, அனுபமா.

Sai Pallavi never think of it -

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி.

இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாரி 2 படத்தில் ரவுட் பேபி பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் ஆனது. இதையடுத்து இவர் திருச்சிக்கு சென்று தேர்வில் கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது.

இந்நிலையில் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படப் பிடிப்புகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இவர் அப்படப்பிடிப்பின்போது, கிராமத்துக் குழந்தைகளுக்கு மெகந்தி வைத்தார், இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது, எல்லோரிடமும் அவர் பாராட்டை பெற்றுள்ளார். இதைப்பார்த்த சமந்தா, அனுபமா அவரைப் புகழ்ந்துள்ளனர்.