குளவி கடித்து சிறுமி சாவு!!

வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் குளவியின் தாக்குதலுக்குள்ளாகி மூன்று வயது குழந்தை ஒன்று சாவடைந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் இன்றையதினம் மதியம் நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள காணியில் துப்புரவு பணியினை மேற்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது அப்பகுதியில் மரம் ஒன்றில் இருந்த குழவிகள் தாக்கியுள்ளது.
இதனால் காயமடைந்த அவர்கள் வவுனியா வைத்தியசாலையில். அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூன்று வயது குழந்தை சாவடைந்துள்ளதுடன், மற்றொரு குழந்தை,  குழந்தையின் தாய் மற்றும் உறவினர் ஒருவர் என மூன்று பேர், காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவத்தில் அருள்ராசன் சமிஸ்கா என்ற மூன்று வயது சிறுமியே சாவடைந்துள்ளார் 
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.