குளத்தில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா பொன்னாவரசங்குளம், குளப்பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.


குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதிக்கு சென்ற வவுனியா பொலிசார் மண் அகளப்பயன்படும் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டி தேடுதலில் ஈடுபட்டனர்
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கி மற்றும் 6 கைக்குண்டுகள்,மற்றும் இரண்டு மகசின்களை பொலிசார் மீட்டனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டுகள் விசேட அதிரடி படையினரால் செயலிழக்கச்செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.