குற்றம் சாட்டப்பட்ட பொலீஸ் ஊழியர்களில் 4.5% விகிதமானவர்களே பொலீஸ் வேலையில் இருந்து நீக்கம்

கடந்த 10 வருட காலத்தில் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொலீஸ் ஊழியர்களில் 4.5%   விகிதமானவர்களே  பொலீஸ் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த 10 வருட காலப்பகுதியில் பல்வேறு குற்றசாட்டுகளுக்காக 66 பொலீஸ் உத்தியோகத்தர்கள் பொலீஸ் குற்ற பிரிவினால் விசாரிக்கப்பட்டதாகவும் அவர்களில் மூவர் மட்டுமே வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது

இது மிகவும் வெறுப்பாக இருப்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் உயர் தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முன்னாள் பொலீஸ் சேவைகள் சபையின் அதிகாரி Alok Mukherjee கூறினார்.