குருணாகல் மேயரின் பிடியாணை ஓகஸ்ட் 24 வரை இடைநிறுத்தம்

இடிக்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் சிறப்புமிக்க 2ஆம் புவனேகபாகு கட்டடம் | குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ விதாரணகுருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இம்மாதம் 24ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குருணாகல் நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்துமாறு கோரி, குருணாகல் மாநகர சபை மேயரினால், ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த மனுவை பரிசீலனை செய்து, இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.