குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

வடமராட்சி வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தனது உறவினர் வீட்டில் அதிகாலை 4 மணி அளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தேவேந்திரன் நரேஷ் வயது 30 என்ற இளம் குடும்பஸ்தர் அவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச்சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.