குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ரஜினிகாந்த்…வைரலாகும் புகைப்படங்கள்

rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

அவர் தற்போது, அண்ணாத்த என்ற படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நடிகைகளும் பிரபல நடிகைகளும் நடித்து வந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று தீபாவளி என்பதால் ரஜினியின் ரசிகர்கள் காலையில், அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு முன் நின்று அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது அவரும் கை அசைத்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், மனைவி லதா ரஜினிகாந்த், மற்றும் மருமகன் பேரக்குழந்தை ஆகியோருடன் இணைந்து தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.

Surperstar Rajinikanth celebrates Diwali with family!

இதுகுறித்த புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

Wishing everyone a very safe and Happy Diwali