கீழடியில் நடைபெற்ற 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு

கீழடியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் 3 கட்டமாகவும், தமிழக தொல்லியல்துறை சார்பில் 2 கட்டமாகவும் கடந்த 2015 முதல் அகழாய்வு பணிகள் நடந்தது. 6ம் கட்டமாக கடந்த 8 மாதங்களாக கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய 4 இடங்களில் பிப்ரவரி 19ம் தேதி முதல் நேற்று வரை அகழாய்வு பணிகள் நடைபெற்றது. 6ம் கட்ட அகழாய்வில் தமிழக தொல்லியல் துறையால் 128 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ஆறாம் கட்ட அகழாய்வில் சூது பவளம், எடைக்கற்கள், தங்க நாணயம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளது. 2 விலங்குகளின் எலும்பு கூடுகள் மற்றும் 17 மனித எலும்பு கூடுகள் கிடைத்துள்ளது. பழமையான 40 முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டுள்ளது. 4 இடங்களில் 47 குழிகள் தோண்டப்பட்டு 2,430 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.