கிழித்து தொங்கவிடப்பட்ட அரசியல்வாதிகள்

அமைச்சரால் திரை நீக்கம் செய்யப்பட்ட வீதி திட்ட பதாதைகள் விசமிகளால் கிழித்தெறியப்பட்டுள்ளது.

03 கிலோமீற்றர் நீளமான வவுனியா கற்பகபரம் பிரதான வீதி மற்றும் 1.7 கிலோமீற்றர் நீளமான பாலாமைக்கல் வீதிகள் ஜனாதிபதியின் ஒருலட்சம் கிலோமீற்றர் வேலைத்திட்டத்தின் கீழ் காப்பற் இடும் பணிக்காக 126.69 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. குறித்த புனரமைக்கான ஆரம்ப பணிகளை கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல்லன்சா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோரால் இம்மாதம் ஆரம்பித்து வைத்திருந்தனர்.
அத்துடன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் கூடிய திட்ட பதாதைகளையும் திறந்து வைத்திருந்தனர்.
இவ்வாறு திரைநீக்கம் செய்யப்பட்ட குறித்த திட்ட பதாதைகளில் காட்சி அளிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களின் படங்களை விசமிகளினால் கிழித்தெறியப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.