கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் விவசாய விற்பனை நிலையத்தில் திருட்டு – பொலிசார் விசாரணை(படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் விவசாய விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இரவு பதிகாகியுள்ளது.

கிளிநொச்சி முழங்காவில்
சந்தியில் அமைக்கப்பட்ட விவசாய விற்பனை நிலையம் ஒன்று நேற்று இரவு திருட்டு கும்பல் ஒன்றால் சூரையாடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில்  60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிக்கக்கூடிய விதை தானியங்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளரினால் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த திருட்டு சம்பவம் நள்ளிரவு 2.40 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. வர்த்தக நிலையத்தில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெறுகிறது தொடர்பில் சந்தேகித்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படையினர் குறித்த கும்பலை பிடிக்க முற்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த கும்பல் தப்பி சென்றுள்ள நிலையில் கடை உரிமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த வர்த்தகர் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தடயவியல் பொலிசாரும் இணைந்துளனர்.

முழங்காவில் பகுதியில் தொடர்ச்சியான முறையில் முழங்காவில் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.